உங்கள் கைகளை அடிக்கடி சவர்க்காரம் பாவித்து கழுவுதல் என்பது இலகுவானதும் மிக பயனுள்ளதுமான செயற்பாடுமாகும். ஆகக் குறைந்த பட்சம் மலசல கூடத்துக்கு சென்று வரும் போதும், உணவுகள் உட் கொள்ளும் முன்பும் கைகளைக் கழுவுங்கள்.
கீழ்க்காணும் அறிவுரைகளை கடைப்பிடித்தால், நீங்கள் சில தொற்று நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கலாம்.
தடுப்பூசிகள் போடுவதால் பல வித நோய்கள் வராமல் தடுக்கலாம். தடுப்பூசிகள் பல்வேறு தொற்று நோய்களின் தாக்கத்தை குறைக்கின்றன.
சுவிஸ் சுகாதார திணைக்களம் கீழ்க்காணும் நோய்களுக்கெதிரான தடுப்பூசிகளை போடுமாறு பரிந்துரை செய்கிறது.
மருத்துவ உதவியை நாடி (Medic-Help) உகந்த ஆலோசனைகளை பெற்றிடுங்கள்.
உடலுறவின் போது எயிட்ஸ் மட்டுமல்லாது பல வித பாலியல் நோய்களும் தொற்றுகின்றன. உடலுறவின் போது ஆணுறைகளை பயன்படுத்துவது மிகச் சிறந்த பாதுகாப்பாகும். அத்துடன் பெண்களுக்கான பெண் உறைகளும் உள்ளன.
இவ் உறைகளை நீங்கள் வசிக்கும் மையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம் அல்லது மருந்தகம் (Apotheken), மருந்துக்கடை(Drogerien) பலசரக்கு கடைகளிலும் வாங்கலாம் .