சுவிஸில் வாழும் சகல மனிதர்களுக்கும் மருத்துவ சேவையை பெற்றுக் கொள்ள உரிமயுண்டு. புகலிட மையத்தில் வசிப்பவர்கள் முதலில் மருத்துவ உதவியை (Medic-Help) நாட வேண்டும்.
முதலில் குடும்பவைத்தியர்
சுவிஸில் நோய்கள் அல்லது விபத்துக்கள் ஏற்படும் போது முதலில் குடும்பவைத்தியரிடம் செல்வது தான் வழக்கத்திலுள்ளது. அவர்கள் உங்களுக்கான சிகிச்சையை வழங்குவார், தேவை ஏற்படின் மருத்துவமனைக்கோ அல்லது பிரத்தியேக வைத்தியரிடமோ அனுப்புவார்.
குடும்பவைத்தியர், தனது நோயாளியின் நோய்கள் பற்றிய விபரங்களை அறிந்திருப்பதால், அவர்களுக்கு சிகிச்சையளிக்க, இலகுவாக இருக்கும். ஆகையால் ஒரே குடும்ப வைத்தியரையே நாடுங்கள்.